தேசிய செய்திகள்

நேதாஜியின் 125வது பிறந்த தினம் - பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட குழு அறிவிப்பு

நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் 125வது பிறந்த நாளை நினைவுகூரும் வகையில், பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

சுதந்திர போராட்ட வீரரான நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் 125வது பிறந்த தினம், வருகிற ஜனவரி, 23ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை ஓராண்டு காலத்திற்கு நினைவுகூரும் வகையில் பிரதமர் மோடி தலைமையில், உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில், நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட, பலர் இடம் பெற்றுள்ளனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகை கஜோல், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், முன்னாள் முதல்வர்கள் தேவகவுடா, மன்மோகன்சிங், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 85 உறுப்பினர்களுடன் இந்த உயர்மட்டக் குழு செயல்பட உள்ளது.

நேதாஜியின் 125வது பிறந்த தினத்தை நினைவுகூரும் நடவடிக்கைகளுக்கு வழிகாட்டுதல் வழங்குவது, திட்டங்கள் வகுப்பது மற்றும் ஆலோசனைகள் மேற்கொள்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை இந்த உயர்மட்டக் குழு மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து