சிறுத்தை குட்டிகள் 
தேசிய செய்திகள்

மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் புதிய வரவு: பெண் சிறுத்தை 5 குட்டிகளை ஈன்றது

இந்தியாவில் உள்ள சிறுத்தைகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.

போபால்,

மத்திய பிரதேச மாநிலம் குனோ தேசிய பூங்காவில், இந்தியாவில் பிறந்த பெண் சிறுத்தையான ‘கேஜெபி 21’ ஒரே பிரசவத்தில் 5 ஆரோக்கியமான குட்டிகளை ஈன்று சாதனை படைத்துள்ளது. இது ‘சிறுத்தை திட்டத்திற்கு’ கிடைத்த மற்றொரு மிகப்பெரிய பெருமையான தருணமாக பார்க்கப்படுகிறது.

குனோ தேசிய பூங்கா

இந்தியாவில் அழிந்துபோன சிறுத்தைகள் இனத்தை மீண்டும் மீட்டெடுக்கும் நோக்கில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து சிறுத்தைகள் கொண்டுவரப்பட்டு குனோ தேசிய பூங்காவில் விடப்பட்டன. இந்த திட்டத்தின் தொடர்ச்சியாக, தற்போது குனோ பூங்காவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.

60 ஆக உயர்ந்தது எண்ணிக்கை

தற்போது 5 புதிய குட்டிகள் பிறந்துள்ளதன் மூலம், இந்தியாவில் உள்ள சிறுத்தைகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. இதில் மிக முக்கிய அம்சமாக, இந்தியாவில் பிறந்த சிறுத்தைகளின் எண்ணிக்கை மட்டுமே தற்போது 41 ஆக அதிகரித்துள்ளது. வனவிலங்கு ஆர்வலர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதல்-மந்திரி மோகன் யாதவ்

இந்தியாவின் வனவிலங்கு பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும், சிறுத்தைகளின் எண்ணிக்கையை மீட்டெடுப்பதிலும் இது மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும். இந்த இமாலய சாதனைக்காகச் சிறுத்தை திட்டம் மற்றும் குனோ தேசிய பூங்காவின் ஒட்டுமொத்த மருத்துவ மற்றும் வனத்துறை குழுவிற்கும் மத்திய பிரதேச முதல்-மந்திரி மோகன் யாதவ் உட்பட பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

SCROLL FOR NEXT