டேராடூன்
இந்தியாவின் நீதி மற்றும் சட்ட அமலாக்க நடைமுறையை நவீனப்படுத்தி, குற்றவியல் நீதி நடைமுறை 2.0-ஐ தேசிய அளவில் அமல்படுத்திய மாநில வரிசையில் வரலாற்று மைல்கல்லை உத்தராகண்ட் தொட்டுள்ளது.
அது டாப் 5 மாநிலங்களில் முதல் இடம் பிடித்து உள்ளது என 2026 ஜனவரிக்கான தேசிய குற்ற பதிவக வாரியத்தின் சமீபத்திய வளர்ச்சிக்கான தரவு தெரிவிக்கின்றது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் தொலைநோக்கு பார்வையுடன் கூடிய வழிகாட்டுதல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நீதி நடைமுறையை கட்டமைப்பதற்கான அவருடைய ஈடுபாடு ஆகியவற்றை இந்த குறிப்பிடத்தக்க சாதனை பிரதிபலிக்கிறது.
இதன்படி, தேசிய அளவில் உத்தராகண்ட் 93.46 மதிப்பெண்களுடன் முதல் இடம் பிடித்து உள்ளது. இதனை தொடர்ந்து 2-ம் இடத்தில் அரியானாவும் (93.41), 3-ம் இடத்தில் அசாமும் (93.16) உள்ளன. அடுத்த 2 இடங்களில் சிக்கிம் (91.82) மற்றும் மத்திய பிரதேசம் (90.55) ஆகியவை உள்ளன. உத்தராகண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் சமியின் திறமையான தலைமைத்துவம் மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பு ஆகியவற்றின் கீழ் இந்த வெற்றி சாத்தியமடைந்து உள்ளது.
புதிய குற்றவியல் சட்டங்களான பாரதீய நியாய சன்ஹிதா, பாரதீய நாகரீக சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதீய சாக்ஷிய அதீனியம் ஆகிய 3 சட்டங்களும் அமல்படுத்தப்படுகின்றன என உறுதி செய்யப்படுவதற்கான பணிகளை முதல்-மந்திரி தனிப்பட்ட முறையில் பொறுப்புடன் கவனித்து வருகிறார். இதற்காக தொடர்ச்சியாக மூத்த அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்ட அளவிலான கள அதிகாரிகளுடன் அவர் மறுசீராய்வு கூட்டங்களையும் நடத்தி வருகிறார்.