தேசிய செய்திகள்

புதிய தலைமுறை; புதிய குரல்: விஜய்க்கு ராகுல் காந்தி வாழ்த்து

முதல்-அமைச்சர் விஜய்க்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் விஜய்க்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முதல்-அமைச்சர் விஜய்க்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “தமிழ்நாடு மக்களின் நம்பிக்கையை நிறைவேற்ற முதல்-அமைச்சர் விஜய்க்கு என் நல்வாழ்த்துகள். ஒரு புதிய தலைமுறையை, புதிய குரலை, புதிய கற்பனையை தமிழ்நாடு தேர்ந்தெடுத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.