புதுடெல்லி,
ஏர் இந்தியா நிறுவனம், டெல்லி-மெல்போர்ன் வழித்தடத்தில் மேம்படுத்தப்பட்ட Boeing 777-300ER சொகுசு விமானங்களை நாளை (ஜூலை 1) முதல் இயக்குகிறது.
இந்த புதிய விமானங்களில் முதல் வகுப்பு, மேம்படுத்தப்பட்ட வணிக வகுப்பு , பயணத்தின்போது பயன்படுத்தக்கூடிய வை-பை இணைய வசதி, சர்வதேச தரத்திலான உணவுகள் உள்ளிட்ட பல்வேறு பிரீமியம் வசதிகள் இடம்பெற்றுள்ளன.
தற்போது டெல்லி–மெல்போர்ன் வழித்தடத்தில் வாரத்திற்கு 4 முறை இந்த சேவை இயக்கப்படுகிறது. பயணிகளின் வரவேற்பை தொடர்ந்து, செப்டம்பர் 1 முதல் தினசரி விமான சேவையாக அதிகரிக்கப்படும் என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
இந்த புதிய சொகுசு சேவை அறிவிப்பு, வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.