தேசிய செய்திகள்

சபரிமலை, மாளிகப்புரம் கோவில்களுக்கு புதிய மேல்சாந்திகள் நாளை தேர்வு

மேல்சாந்திகளை பந்தளம் மன்னர் குடும்பத்தை சேர்ந்த சிறுவன் அர்ஜூன், சிறுமி அனஸ்வரா ஆகியோர் தேர்வு செய்வார்கள்.

திருவனந்தபுரம்,

சபரிமலை, மாளிகப்புரம் கோவில்களுக்கு புதிய மேல்சாந்திகள் நாளை தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்பட இருக்கிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 22-ந் தேதி வரை 5 நாட்கள் வழிபாடுகள் நடைபெறும்.

இந்தநிலையில் நடப்பு மண்டல மகரவிளக்கு சீசன் முதல் ஒரு வருட காலத்திற்கு சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்கு மேல்சாந்திகளை தேர்வு செய்வதற்கான நேர்முக தேர் வில், சபரிமலை கோவிலுக்கு 5 பேரும், மாளிகப்புரத்திற்கு 3 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவர் வீதம் சபரிமலை மற்றும் மாளிகப்புரத்திற்கு தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கான குலுக்கல் நாளை காலை சன்னிதானத்தில் உஷ பூஜைக்கு பின் நடைபெறும்.

மேல்சாந்திகள் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படுவர்கள். இவர்களை பந்தளம் மன்னர் குடும் பத்தை சேர்ந்த சிறுவன் அர்ஜூன், சிறுமி அனஸ்வரா ஆகியோர் தேர்வு செய்வார்கள். தேர்வு செய்யப்படும் நபர்கள் நடப்பு மண்டல சீசன் (நவம்பர் 17-ந்தேதி) முதல் அடுத்த மண்டல சீசன் காலம் தொடக்கம் வரை மேல்சாந்திகளாக பணியாற்றுவர்கள்.

அவர்களுக்கு தந்திரி புனி தநீர் தெளித்து மேல்சாந்தியாக நியமிப்பார். மேல் சாந்திகள் தேர்வுக்கான குலுக்கல் ஐகோர்ட்டு பிரதிநிதியான முன்னாள் நீதிபதி விஜி அருண் முன்னிலையில் நடைபெறும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.

SCROLL FOR NEXT