தேசிய செய்திகள்

தென்னை விவசாயத்தை மேம்படுத்த பட்ஜெட்டில் புதிய திட்டம் அறிவிப்பு

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள தென்னை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள 1 கோடி தென்னை விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

2026-2027-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், தென்னை சாகுபடியை அதிகரிக்கும் வகையில், தென்னை மேம்பாட்டு திட்டம் என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னை விவசாயத்தை நவீனப்படுத்தவும், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள 1 கோடி தென்னை விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், தஞ்சாவூர், திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் சுமார் 12 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் தென்னை விவசாயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விவசாயத்தில் நேரடியாக சுமார் 30 லட்சம் குடும்பங்கள் ஈடுபட்டுள்ளன.

தென்னை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கும் பயன்கள் வருமாறு:-

* தென்னை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்படும். இது உற்பத்தி செலவுகளை குறைத்து விவசாயிகளுக்கு நேரடி நிதி ஆதரவாக அமையும்.

* தேங்காய் மகசூல் இல்லாத மற்றும் உற்பத்தி திறன் குறைந்த மரங்களை அகற்றிவிட்டு, உயர்தரமான தென்னை மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும்.

* தென்னை உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் "ஹைடன்சிட்டி பிளான்டேஷன்" முறை ஊக்குவிக்கப்படும்.

* தென்னை நர்சரிகள் அமைப்பதற்கும், புதிய தென்னை தோப்புகளை உருவாக்குவதற்கும் 75 சதவீதம் வரை நிதி உதவி வழங்கப்படும்.

* தேங்காயை எண்ணெயாகவும், தேங்காய் பூ பவுடராகவும், இளநீர் பாட்டிலாகவும் மாற்றி மதிப்பு கூட்டல் செய்யும் விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

* தென்னையில் ஏற்படும் பூச்சி தாக்குதல் மற்றும் நோய் தாக்குதல்களை கட்டுப்படுத்துவதற்காக ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை அமைப்பு உருவாக்கப்படும்.

* உலகளவில் உற்பத்தியாகும் மொத்த தேங்காய்களில் சுமார் 55 சதவீதம் இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் உற்பத்தியாகும் நிலையில், அந்த நாடுகளுக்கு போட்டியாக இந்திய தேங்காய்களுக்கு 2030-ம் ஆண்டுக்குள் உலக சந்தையில் பிரிமீயம் விலை கிடைக்கும் வகையில் திட்டங்கள் தீட்டப்படும்.

சட்டத்தை மதிக்க முடியாவிட்டால் இந்தியாவில் இருந்து வெளியேறுங்கள்: வாட்ஸ்அப்பிற்கு சுப்ரீம் கோர்ட்டு எச்சரிக்கை

மக்களவையில் அமளி: மாணிக்கம் தாகூர் உள்பட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட்

பட்ஜெட் 2026-27: சாமானிய மக்களுக்கு என்ன பலன்கள்.. எதெல்லாம் விலை குறையும்?

என்னென்ன அமெரிக்க வேளாண் விளைபொருட்களுக்கு பிரதமர் மோடி ஒப்புதல் வழங்கியுள்ளார்: சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளி: மக்களவை ஒத்திவைப்பு