புதுடெல்லி,
ரெயில்வே துறையின் மத்திய இணை மந்திரி மனோஜ் சின்ஹா மக்களவையில் இன்று பேசும்பொழுது, தமிழகத்தில் இயக்கப்பட்டு வரும் நீலகிரி மலை ரெயிலால் 2017-18ம் ஆண்டில் ரூ.28 கோடி செலவு ஏற்பட்டு உள்ளது. ரூ.1..82 கோடி வருவாய் கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.
இந்திய ரெயில்வேக்கு இந்த ரெயிலால் இழப்பு ஏற்பட்டபொழுதிலும், பாரம்பரிய ரெயில் சேவையின் வருவாய் இழப்புக்கு ஈடு செய்யும் வகையில் எந்த திட்டமும் இல்லை என்றும் சின்ஹா கூறியுள்ளார்.
இதனால் ரெயில்வே துறைக்கு ரூ.26 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோன்று கடந்த 2016-17ம் ஆண்டில் ரூ.26.74 கோடி செலவு ஏற்பட்டுள்ளது. ரூ.1.99 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
இந்த நீலகிரி மலை ரெயில்வேயானது யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தலம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதியில் சுற்றுலாவாசிகளுக்காக நீலகிரி மலை ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.