தேசிய செய்திகள்

பீகார் முதல் மந்திரி பதவியில் இருந்து விலகுவதாக நிதிஷ் குமார் அறிவிப்பு

நிதிஷ் குமார் பதவி விலக எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பீகாரில் ஐக்கிய ஜனதாதளம் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உள் ளது. இந்த கூட்டணி சார்பில் ஐக்கிய ஜனதாத ளம் தலைவர் நிதிஷ்குமார் முதல்-மந்திரியாக உள்ளார். மாநிலத்தில் நீண்ட காலம் முதல்-மந்திரியாக இருந்த பெருமைக்கு சொந்தக்காரரான நிதிஷ்குமார் சமீபத்தில்தான் 75 வயதை நிறைவு செய் தார்.

மாநிலத்தில் 10-வது முறையாக கடந்த நவம்பர் மாதம்தான் முதல்-மந்தி ரியாக நிதிஷ்குமார் பதவியேற்ற நிலையில், தனது முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பீகாரில் அமையும் புதிய அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும்: வழிகாட்டுதல் இருக்கும் என்று நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். நிதிஷ் குமார் பதவி விலக எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நிதிஷ்குமாருக்கு மத்திய மந்திரி பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT