தேசிய செய்திகள்

பீகார் முதல்-மந்திரி பதவியில் இருந்து நிதிஷ்குமார் விலகல்?

முதல்-மந்திரி பதவி பா.ஜ.க.விற்கு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

பாட்னா,

பீகார் முதல்-மந்திரியும், ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார், தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல், பீகார் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அவர் மாநிலங்களவை எம்.பி. தேர்தலுக்கு நாளை(5-ந்தேதி) மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சூழலில், நிதிஷ் குமார் ராஜினாமா செய்யும் பட்சத்தில், அடுத்த முதல்-மந்திரி யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதன்படி முதல்-மந்திரி பதவி பா.ஜ.க.விற்கு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதே சமயம், நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் துணை முதல்-மந்திரியாக பதவியேற்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.