தேசிய செய்திகள்

'ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிகளில் உடன்பாடு இல்லை' - தமிழிசை சவுந்தரராஜன் கருத்து

கொண்டாட்டங்களுக்கு வரைமுறை இருக்க வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிகளில் தனக்கு உடன்பாடு இல்லை என புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் எனக்கு உடன்பாடு இல்லை. அது வேறுமாதிரி சென்று கொண்டிருக்கிறது. கொண்டாட்டங்களுக்கு வரைமுறை இருக்க வேண்டும். இதுகுறித்து அரசு மற்றும் காவல்துறையிடம் பேசுவேன்."

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT