தேசிய செய்திகள்

சபாநாயகர் ஓம்.பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

சபாநாயகர் ஓம்.பிர்லாவை பதவியில் இருந்து நீக்க தீர்மானம் கொண்டு வர இந்தியா கூட்டணி திட்டமிட்டுள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் காலை 11 மணிக்கு தொடங்கிய அவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்தநிலையில், மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணியின் நாடாளுமன்ற கட்சி தலைவர்கள்கள் கூட்டத்தில் ஆலோசனை ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பேசப்பட வேண்டிய முக்கிய விவகாரங்கள் குறித்தும் எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. பிரதமரை தாக்க காங்கிரஸ் பெண் எம்.பிக்.க்கள் சதி செய்வதாக ஓம்.பிர்லா குற்றம்சாட்டி இருந்தார்.