தேசிய செய்திகள்

"மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் வளர்ச்சி இல்லை"- மத்திய ரெயில்வே மந்திரி

தமிழகத்தில் ரெயில்வே திட்டங்கள் தாமதமாவதற்கு காரணம், நிலம் கையகப்படுத்தும் பணிகள் முழுமையாக நிறைவடையாததே என அவர் கூறினார்.

புது டெல்லி,

“மாநில அரசின் முழுமையான ஒத்துழைப்பு இல்லாமல் வளர்ச்சி சாத்தியமில்லை” என மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பல முக்கிய ரெயில்வே திட்டங்கள் தாமதமாவதற்கு காரணம், நிலம் கையகப்படுத்தும் பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையாததே என அவர் விளக்கம் அளித்தார். ரெயில்வே திட்டங்களுக்கு தேவையான நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசுக்கு மத்திய அரசு ரூ.1,465 கோடி நிதி வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால், தமிழகத்தில் ரெயில்வே திட்டங்களுக்கு தேவையான மொத்த நிலப்பரப்பில் தற்போது வரை 24 சதவீதம் மட்டுமே மாநில அரசால் ரயில்வேக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். தமிழக அரசு நிலம் கையகப்படுத்தி கொடுக்காததே ரெயில்வே திட்டங்கள் நிறைவேறாமல் இருக்க காரணம் என்று கூறினார்.