தேசிய செய்திகள்

முன்பதிவு இல்லாவிட்டாலும் சபரிமலைக்கு வரும் எந்தவொரு பக்தரும் திருப்பி அனுப்பப்படமாட்டார்கள் - தேவஸ்வம் போர்டு தலைவர்

இருப்பினும் ஏதேனும் ஒரு வகையில் முன்பதிவு செய்திருப்பது கட்டாயம் என தேவஸ்வம் போர்டு தலைவர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சபரிமலை,

கேரளம் மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோயி​லில் இந்த ஆண்​டுக்​கான மண்டல கால பூஜை, கடந்த 17-ம் தேதி தொடங்​கியது. இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் ஐயப்பன் கோயிலுக்கு வருகை தந்து வருகின்றனர். இந்நிலையில் சபரிமலை கோயிலுக்கு வந்துசேர்ந்ததை குறிக்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள மைல்கல் புதிதாக வண்ணம் பூசப்பட்டு உள்ளதால் அது பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

நடப்பந்தல் தொடங்கும் இடத்திற்கு அருகே, வெள்ளை மற்றும் நீல நிறத்தில் புதிதாக வண்ணம் பூசப்பட்டு ''சபரிமலை ZERO' என எழுதப்பட்டுள்ள இந்த மைல்கல் அருகே பக்தர்கள் போட்டோ எடுத்தும் வீடியோ எடுத்தும் தங்கள் சமூகவலைதள பக்கங்களில் பதிவிடுகின்றனர்.

இந்தநிலையில், முன்பதிவு இல்லாவிட்டாலும் சபரிமலைக்கு வரும் எந்தவொரு பக்தரும் திருப்பி அனுப்படமாட்டார்கள் தேவஸ்வம் போர்டு தலைவர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

‘வெர்ச்சுவல் க்யூ' மூலம் முன்பதிவு செய்யப்பட்டு பின்னர் ரத்து செய்யப்படும் இடங்கள் 8 மணி நேரத்துக்குப் பின்பே மீண்டும் முன்பதிவுக்கு கிடைக்கும். இந்த நடைமுறை இன்று (24.11.26) முதல் அமலுக்கு வரும்.

அய்யப்பனை தரிசிக்க சபரிமலை வரும் எந்தவொரு பக்தரும் திருப்பி அனுப்பப்படமாட்டார்கள். இருப்பினும் ஏதேனும் ஒரு வகையில் முன்பதிவு செய்திருப்பது கட்டாயம் என்றார்.

SCROLL FOR NEXT