தேசிய செய்திகள்

வருமான வரி தாக்கலுக்கான காலக்கெடு நீட்டிப்பு இல்லை - மத்திய அரசு

வருமான வரி தாக்கலுக்கான காலக்கெடு நீட்டிப்பு இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

தனிநபர் வருமான வரி தாக்கல் செய்வதற்கு டிசம்பர் 31-ந்தேதி (நேற்று) வரை காலக்கெடு அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி கடந்த சில நாட்களாக ஆயிரக்கணக்கானோர் நடப்பு நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்து வந்தனர்.

இந்த காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில், இதை மேலும் நீட்டிக்க முடியாது என மத்திய அரசு கூறியுள்ளது.

அந்தவகையில், வருமான வரி தாக்கலுக்கான இறுதிநாள் டிசம்பர் 31, 2021 என்பதே அதிகாரபூர்வ காலக்கெடு என மத்திய வருவாய் செயலாளர் தருண் பஜாஜ் கூறியுள்ளார். நடப்பு ஆண்டில் இதுவரை தாக்கல் செய்துள்ளோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகம் எனவும் அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT