டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி மத்திய சாலைபோக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: -, பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிர்காலமே இல்லை. உயிரி எரிபொருட்கள், சிஎன்ஜி, எல்என்ஜி மற்றும் மின்சார வாகனங்கள் போன்ற மாற்று எரிபொருட்களை நோக்கித் திரும்ப வேண்டிய அவசியம் வாகன உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இறக்குமதி மற்றும் சுற்றுச்சூழல் தாக்கம் ஆகிய அம்சங்களில், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை தீவிரமான சிக்கல்களை ஏற்படுத்துகிறது.
இந்தியாவில் ஆண்டுக்கு 70 ஆயிரம் பேருந்துகள் தயாரிக்கப்படும் நிலையில் அடுத்த மூன்று ஆண்டுகளில் மின்சாரப் பேருந்துகளுக்கான தேவை மட்டும் ஒன்றரை லட்சம் என்ற எண்ணிக்கையை எட்டக்கூடும். டாடா மோட்டார்ஸ், வோல்வோ, அசோக் லேலண்ட் மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள், ஹைட்ரஜன் எரிபொருள் சோதனைகளில் ஏற்கனவே ஈடுபட்டுள்ளன. நாங்கள் தற்போது 10 வழித்தடங்களில் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் லாரிகள் மற்றும் பேருந்துகளை இயக்கி வருகிறோம். ஹைட்ரஜன் தான் எதிர்காலத்தின் எரிபொருள்” என்றார்.