தேசிய செய்திகள்

சுங்கச்சாவடிக்கு செல்லத் தேவையில்லை... டிஜிட்டல் முறையில் உள்ளூர் பாஸ் வழங்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

இனிமேல் வீடுகளில் இருந்தபடியே சில நிமிடங்களில் இதை ஆன்லைனில் செய்து முடிக்கலாம்.

புதுடெல்லி,

சுங்கச்சாவடிகளில் இருந்து 20 கி.மீ. சுற்றளவுக்குள் வசிக்கும் உள்ளூர்வாசிகள் தங்களின் மாதாந்திர உள்ளூர் பாஸ்களை இனி ராஜ்மார்க் யாத்ரா மொபைல் செயலி மூலமாகவே டிஜிட்டல் முறையில் எளிதாகப் பெற்றுக் கொள்ளலாம். இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி இது நடைமுறைக்கு வந்துள்ளது.

இதற்கு முன்பு உள்ளூர்வாசிகள் சுங்கச்சாவடிகளுக்கு நேரடியாக சென்று, முகவரி சான்றுகளைச் சமர்ப்பித்துத்தான் இந்த பாஸைப் பெற முடிந்தது. இனிமேல் வீடுகளில் இருந்தபடியே சில நிமிடங்களில் இதை ஆன்லைனில் செய்து முடிக்கலாம்.

இந்தச் செயலி அரசின் டிஜி லாக்கர் மற்றும் வாகன தளங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரரின் முகவரி, வாகன எண் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பாஸ்டேக் விவரங்கள் தானாகவே சரிபார்க்கப்படும்.