புதுடெல்லி,
இன்டர்நெட் மற்றும் மொபைல் சிக்னல் இல்லாத இடங்களிலும், 'என். எப்.சி.' எனப்படும் அருகாமை தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் வாயிலாக யு.பி.ஐ.-ல் பணம் செலுத்தும் வசதி விரைவில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வசதியில், ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக 2,000 ரூபாய் வரை செலுத்த அனுமதிக்கப்படலாம். இதற்கு, இன்டர்நெட் சேவை இருக்கும்போது 'யு.பி.ஐ. லைட்' கணக்கில் முன் கூட்டியே பணத்தை சேர்க்க வேண்டும். பின், செல்போனை கடையின் பணம் பெறும் கருவிக்கு அருகே காட்டி, இன்டர்நெட் அல்லது ரகசிய எண் இல்லாமல் பணம் செலுத்தலாம்.
தற்போதுள்ள '*99#' முறைக்கு மொபைல் சிக்னலும், 'யு.பி.ஐ. 123 பே' வசதிக்கு தொலைபேசி அழைப்பும் அவசியம். புதிய 'என். எப்.சி.' வசதியில், அலை பேசியை பணம் பெறும் கருவிக்கு அருகே காட்டினாலே போதும், இன்டர் நெட், சிக்னல் அழைப்பு தேவையில்லை.
மேலும், இந்த வசதிக்கு ஏற்ற பணம் பெறும் கருவிகளை ஆய்வு செய்து தேசிய பணப்பரிவர்த் தனை கழகம் அனுமதி வழங்கும் என எதிர்பார்க் கப்படுகிறது.