தேசிய செய்திகள்

என்னை சந்திக்க இனி யாரும் என் வீட்டுக்கு வரவேண்டாம் - டி.கே.சிவக்குமார்

டி.கே.சிவக்குமார் முதல்-மந்திரி ஆன பிறகு அந்த இல்லத்தை இதுவரை பயன்படுத்தாமல் இருந்து வந்தார்.

பெங்களூரு,

கர்நாடக புதிய முதல்-மந்திரியாக டி.கே.சிவக்கு மார் கடந்த 3-ந் தேதி பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்ற பிறகு விருந்தினர்கள், கட்சி நிர்வாகி கள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் பெங்களூரு சதாசிவநகரில் உள்ள தனது வீட்டில் சந்தித்து வந்தார்.இந்த நிலையில் முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் இனி என்னை சந்திக்க சதாசி வநகர் வீட்டுக்கு வர வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக முதல்-மந்திரியின் கிருஷ்ணா இல்லத்துக்கு வரும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள், தொண்டர்கள் இதை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.

முதல்-மந்திரியின் அதிகாரப்பூர்வ அலுவலக இல்லமான கிருஷ்ணாவில் முக்கியமான அதிகாரிகளின் ஆலோசனை கூட்டங்கள், முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். டி.கே.சிவக்குமார் முதல்-மந்திரி ஆன பிறகு அந்த இல்லத்தை இதுவரை பயன்படுத்தாமல் இருந்து வந்தார். அதற்கு பதிலாக குமரகிருபா விருந்தினர் மாளிகை யில் உள்ள பங்களாவை அலுவலக இல்லமாக மாற்ற டி.கே.சிவக்குமார் திட்டமிட்டடார். அது பழங்கால கட்டிடம் என்பதால் அதில் புதுப்பிக்கும் பணிகளை மேற்கொள்ள எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் கிருஷ்ணா இல்லத்தை பயன்படுத்துவதாக டி.கே.சிவக்குமார் அறிவித்துள்ளார்.