பிரதமர் மோடி 
தேசிய செய்திகள்

மகளிர் இடஒதுக்கீடு அமல்படுத்துவதை எந்தக் கட்சியாலும் தடுக்க முடியாது; பிரதமர் மோடி

பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான எங்களது உறுதி ஒருபோதும் மாறாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை தனது அரசு நிச்சயம் அமல்படுத்தும் என்றும், இதனை எந்தக் கட்சியாலும் தடுக்க முடியாது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான எங்களது உறுதி ஒருபோதும் மாறாது. பெண்களுக்கான இடஒதுக்கீட்டுக்கு இடையூறாக இருக்கும் அனைத்து தடைகளையும் நிச்சயம் அகற்றுவோம். இதற்கான வாக்குறுதியை நிறைவேற்றுவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.

பெண்கள் இடஒதுக்கீட்டை ஆதரிப்பவர்களின் நம்பிக்கை அதிகமாக உள்ளது. எங்களது துணிச்சல் உறுதியானது. இந்த இடஒதுக்கீட்டை எதிர்க்கும் கட்சிகளால் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரிப்பதை ஒருபோதும் தடுக்க முடியாது. இது நிறைவேறுவதற்கான காலம் மட்டுமே காத்திருக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT