அரியலூர் மாணவி அனிதா நீட் தேர்வு முறையால் மருத்துவ படிப்பில் சேர முடியாமல் மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார்.
இது தமிழகம் முழுவதும் மாணவர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அரசியல் கட்சிகளை தொடர்ந்து கடந்த 4ந் தேதி முதல் பள்ளி-கல்லூரி
மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். மாணவி அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டும், தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம், மறியல், மனித சங்கிலி, பேரணி ஆகிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று 3-வது நாளாக மாணவர்கள் போராட்டம் நீடித்து வருகிறது. கோவையில் நடந்த போராட்டத்தின் போது ஒரு போலீஸ் அதிகாரி பெண் சப் இன்ஸ்பெகடரிடம் தவறாக நடந்து கொண்டதாக The News Minute செய்தி மற்றும் வீடியோ வெளியிட்டு உள்ளது.
கூட்டத்தை கட்டுபடுத்தும் சாக்கில் ஒரு போலீஸ் அதிகாரி தனது ஜூனியர், பெண் சப் இன்ஸ்பெக்டரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக கூறப்படுகிறது. கூட்டத்திற்குள் சிக்கி கொண்ட அந்த பெண் போலீசை போலீஸ்காரர் தகாத இடங்களில் தொட்டு உள்ளார்.
இந்த வீடியோ கோவை காந்திபுரம் சிக்னல் அருகே எடுக்கபட்டு உள்ளது.இந்த காட்சி காக்கி சட்டை அணிந்த பெண்கள் கூட பாதுகாப்புடன் இல்லை என்பதை காட்டுகிறது.இந்த் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது
இது குறித்து அந்த போலீஸ் அதிகாரி கூறும் போது "ஒரு எதிர்ப்பு நடந்து கொண்டிருக்கிறது நான் நிலைமையை கட்டுப்படுத்த வேண்டியிருந்தது, வேறு எந்த நோக்கமும் எனக்கு இல்லை, எனக்கு முன்னால் ஒரு பெண் நின்று கொண்டிருந்ததை நான் கவனிக்கவில்லை.நான் அதை மீண்டும் மீண்டும் செய்யவில்லை என்று நான் நம்புகிறேன். வீடியோவில் என்னை மோசமாக
காட்டப்பட்டுள்ளது.
கோயமுத்தூர் போலீஷ் கமிஷனர் அமல்ராஜ் இந்த வீடியோவை கவனத்தில் எடுத்துக் கொண்டு விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளார். இருப்பினும், உதவி ஆணையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சம்பந்தபட்ட பெண் போலீஸ் தனது உயர் அதிகாரியின் மீது புகார் கொடுக்க முன்வரவில்லை.
வீடியோவை பார்க்க