தேசிய செய்திகள்

நாட்டை விட்டு வெளியேற மறுப்பு: ஐகோர்ட்டில் நடிகர் இம்ரான் கான் மனு

ஓ.சி. ஐ கார்டு வைத்திருப்பவர்கள் போராட்டத்தில் பங்கேற்க கூடாது என்ற எந்த தடையும் இல்லை என நடிகர் இம்ரான் கான் கூறியுள்ளார்.

மும்பை,

நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என போலீசார் அனுப் பிய நோட்டீசுக்கு எதிராக நடிகர் இம்ரான்கான் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார்.

நாட்டை விட்டு வெளியேற நோட்டீஸ்

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் தலைமை தேர்தல் கமி ஷனர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி கடந்த 10-ந் தேதி மும்பை ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் போராட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட இந்தி நடிகர் இம்ரான் கானை (வயது43) போலீசார் கைது செய்தனர்.

அமெரிக்க குடியுரிமை பெற்ற அவர், 'இந்திய வம்சாவளி கார்டு' (ஓ.சி.ஐ.) மூலமாக இந்தியாவில் வசித்து வருகிறார். வெளிநாட்டவர் சட்ட விதிகளின்படி, அவர் இந்தியாவில் அரசி யல் போராட்டத்தில் பங்கேற்றது விதிமீறல் என கூறி, வரும் 28-ந் தேதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என மும்பை போலீசார் அவருக நோட்டீஸ் அனுப்பினர். தவறினால் நாடு கடத்தப்படுவார் என்றும் எச்சரிக்கப்பட்டது.

ஐகோர்ட்டில் மனு

போலீசாரின் இந்த நோட்டீசை எதிர்த்து நடிகர் இம்ரான் கான் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

மும்பை போலீசார் எனக்கு அனுப்பியுள்ள நோட்டீஸ் சட்டவிரோதமானது. தற்போதைய இந்திய சட்டங்களிலோ அல்லது விதிகளிலோ 'ஓ.சி.ஐ.' கார்டு வைத்திருப்பவர்கள் அமைதியான முறையில் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என்று எந்த தடையும் விதிக்கப்படவில்லை. நாட்டை விட்டு வெளியேற கட்டாயப்படுத்த முடியாது.

மேலும், இந்த நோட்டீசை அனுப்பும் முன் என்னிடம் எந்த விசாரணையோ, விளக்கக் கடி தமோ கேட்கப்படவில்லை. எனக்கு பதில் அளிக்கக்கூட வாய்ப்பு தராமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே. இந்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டும். இடைக்கால நிவா ரணமாக இந்த உத்தரவுக்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி மகேஷ் சந்திர திரிபாதி மற்றும் நீதிபதி அத்வைத் சேத்னா ஆகியோர் அடங்கிய அமர்வில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

SCROLL FOR NEXT