தேசிய செய்திகள்

பிறருடைய தவறுகளால் அல்ல... இந்தியாவின் வளர்ச்சி நம்முடைய வலிமையால் நிர்ணயம் செய்யப்படும்: மத்திய மந்திரி ஜெய்சங்கர்

இந்தியாவின் வளர்ச்சியை இந்தியாவே தீர்மானிக்கும் என மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேசியுள்ளார்.

புதுடெல்லி

டெல்லியில் இன்று நடந்த ரெய்சினா பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சியில் மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், ஒரு நாட்டின் பெயரால் அழைக்கப்படுகிற ஒரே சமுத்திரம், இந்திய சமுத்திரம்.

ஏனெனில் அதன் மத்திய பகுதியில் நம் நாடு அமைந்துள்ளது. நம்முடைய வளர்ச்சியால், இந்திய சமுத்திரத்தில் உள்ள பிற நாடுகளும் பலனடையும். நம்முடன் சேர்ந்து பணியாற்றுபவர்கள் அதிக பலனை பெறுவார்கள் என பேசினார்.

இந்தியாவின் உலகளாவிய வளர்ச்சி பாதையானது சுய நிர்ணயம் செய்யப்படும். நாட்டின் வளர்ச்சியானது சொந்த பலம், உள்நாட்டு திறன்கள் மற்றும் மனவுறுதி ஆகியவற்றால் கட்டமைக்கப்படும் என்று அவர் கூறினார்.

இந்தியாவின் வளர்ச்சியை இந்தியாவே தீர்மானிக்கும். நம்முடைய வலிமையால் அது நிர்ணயம் செய்யப்படும். பிறருடைய தவறுகளால் அல்ல என்று அப்போது கூறினார்.

SCROLL FOR NEXT