மத்திய அரசு 
தேசிய செய்திகள்

'கேரளா' அல்ல... இனி 'கேரளம்' தான் - அரசிதழில் வெளியிட்டது மத்திய அரசு

மாநிலத்தின் பெயரை கேரளம் என்று அனைத்து மொழிகளிலும் மாற்ற கோரி கேரள மாநில சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவனந்தபுரம்,

நமது அண்டை மாநிலமான கேரளாவின் பெயர் இனி அதிகாரப்பூர்வமாக 'கேரளம்' என்று மாற்றப்பட்டு மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அரசாணை வெளியிட்டுள்ளது.

சட்டமன்றத் தீர்மானம்

மலையாள மொழியில் பாரம்பரியமாக 'கேரளம்' என்றே அழைக்கப்பட்டு வந்த நிலையில், மாநிலத்தின் பெயரை அனைத்து மொழிகளிலும் மாற்ற கோரி கேரள மாநில சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்ற ஒப்புதல்

இந்த தீர்மானத்தை தொடர்ந்து, இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் மற்றும் மத்திய அரசின் பதிவேடுகளிலும் இப்பெயர் மாற்றத்தை நடைமுறைப்படுத்த அரசியல் சாசன பிரிவு 3-ன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் ஒப்புதலையும் பெற்றது.

அனைத்து மொழிகளிலும் மாற்றம்

மத்திய அரசின் இந்த இறுதி அறிவிப்பை தொடர்ந்து, இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் மற்றும் மத்திய அரசின் பதிவேடுகளிலும் இனி 'கேரளா' என்ற பெயர் நீக்கப்பட்டு, 'கேரளம்' என்றே அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படும்.

மலையாளிகள் வரவேற்பு

மாநிலத்தின் கலாச்சார அடையாளத்தையும் வரலாற்று சிறப்பயும் பிரதிபலிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த வரலாற்று சிறப்புமிக்க பெயர் மாற்றம், உலகெங்கும் வாழும் மலையாளிகளிடையே பெரும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.