குஜராத், டெல்லி மற்றும் தெலுங்கானா ஐகோர்ட் நீதிபதிகள், நேற்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக முறைப்படி பத வியேற்றுக் கொண்டனர். இதன் மூலம் சுப்ரீம் கோர்ட் மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்தது.குஜராத் ஐகோர்ட் தலைமை நீதிபதி சுனிதா அகர்வால், டெல்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி டி.கே.உபாத் யாயா, தெலுங்கானா ஐகோர்ட் தலைமை நீதிபதி அபரேஷ் குமார் சிங் ஆகியோரை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நியமிக்க கொலிஜீயம் பரிந்துரைத்தது.
இதனை ஏற்ற மத்திய அரசு, அதிகாரப்பூர்வ நியமன அறிவிப்பாணையை வெளியிட்டது. இதையடுத்து, மூன்று ஐகோர்ட் தலைமை நீதிபதிகளும், முறைப்படி சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நேற்று பதவியேற்றுக் கொண்டனர். சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி உட்பட மொத்தம், 38 நீதிபதிகள் பதவி வகிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தற்போது, மூன்று நீதிபதிகள் பதவியேற்றுக் கொண்டதால், மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. ஒரு நீதிபதி இடம் மட்டுமே காலியாக உள்ளது.