தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் அதிர்ச்சி: நர்சிங் மாணவி கொலை

தந்தையை இழந்த ஹரிணி தனது தாயாருடன் கிராமத்தில் வசித்து வந்தார்.

ஐதராபாத்,

தெலுங்கானாவில் நர்சிங் மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடெம் மாவட்டம் வெங்கண்ணபாலம் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஹரிணி. 19 வயதான ஹரிணி அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் கல்வி படித்து வந்தார். விடுதியில் தங்கி படித்து வந்த ஹரிணி விடுமுறையையொட்டி கடந்த சில நாட்களுக்குமுன் சொந்த ஊருக்கு வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்குமுன் தந்தையை இழந்த ஹரிணி தனது தாயாருடன் கிராமத்தில் வசித்து வந்தார்.

மாணவி கொலை

இந்நிலையில், ஹரிணியின் தாயார் நேற்று காலை கிராமத்தில் உள்ள உறவினரின் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டில் ஹரிணி மட்டும் தனியாக இருந்துள்ளார். பின்னர், ஹரிணியின் தாயார் மீண்டும் வீட்டிற்கு வந்தபோது ஹரிணி வீட்டில் சடலமாக கிடந்துள்ளார். அவரது உடலில் காயங்களுடன், கழுத்து நெரிக்கப்பட்ட தடையங்கள் இருந்தன.

இதனால் அதிர்ச்சியடைந்த ஹரிணியின் தாயார் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார், ஹரிணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஹரிணியை கொலை செய்தது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT