புவனேஷ்வர்,
ஒடிசா மாநில பூரி நகரில் உலகப்புகழ்பெற்ற ஜெகநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புகழ்பெற்ற ரத யாத்திரை நேற்று தொடங்கியது. இந்த கோவில் திருவிழா வரும் 24ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெறும்.
அந்த வகையில் நேற்று நடைபெற்ற பூரி ஜெகநாதர் ரத யாத்திரையில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். அப்போது யாத்திரையில் 2 பக்தர்கள் உயிரிழந்தனர்.
மூச்சுத்திணறல் , மாரடைப்பு காரணமாக ரத யாத்திரையில் பங்கேற்ற 60 வயது மற்றும் 35 வயதுடைய 2 பக்தர்கள் உயிரிழந்ததாக ஒடிசா அரசு தெரிவித்துள்ளது. அதேவேளை, ரத யாத்திரையின்போது எந்தவித கூட்டநெரிசலும் ஏற்படவில்லை என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.