தேசிய செய்திகள்

ரூ.64 கோடிக்கு சொத்துகள் குவித்த போலீஸ் தலைமை காவலர்; சோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்

இந்தூரில் உள்ள ஒன்பது புதிய சொத்துக்கள் குறித்த விவரங்கள்வெளியாகியுள்ளன; இவை அனைத்தும் விவசாய நிலங்கள் ஆகும்.

போபால்,

மத்திய பிரதேசத்தில் தலைமைக்காவலர் ஒருவர் ரூ.64 கோடிக்கு சொத்துக்கள் வாங்கி குவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியபிரதேசத்தின் இந்தூர் போலீஸ் பயிற்சி கல்லூரியில் ஓட்டுநராக பைரோஸ்கான் (48) என்ற தலைமைக் காவலர் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் இவர் நீண்ட நாட்களாகப்பணிக்கு வராமல், தனது அதிகாரத்தைப்பயன்படுத்தி சர்ச்சைக்குரிய நிலங்களை வாங்குவதுமற்றும் விற்பதுபோன்ற சட்டவிரோதச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாகப் புகார் எழுந்தது. எனவே இது குறித்து, மத்தியப் பிரதேசத் தின் ஊழல் தடுப்பு கண்காணிப்பு அமைப்பான லோக் ஆயுக்தா சிறப்பு காவல் துறை விசாரணை மேற்கொண்டது.

அதன்பேரில் அவருக்குச்சொந்தமான இடங்கள் மற்றும்அவரது குடும்ப உறுப்பினர்கள், உதவியாளர்களின் வீடுகளில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர் உள்பட அனைவரும் சேர்ந்து 64 கோடி ரூபாய்க்கும் அதிகமான அசையா சொத்துக்களை வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்த்து , கான் மற்றும் அவரது கூட்டாளிகள் வசம் உள்ள சொத்துக்களை புலனாய்வாளர்கள் ஆழமாக ஆராய்ந்து வந்த நிலையில், இந்தூரில் உள்ள ஒன்பது புதிய சொத்துக்கள் குறித்த விவரங்கள்வெளியாகியுள்ளன; இவை அனைத்தும் விவசாய நிலங்கள் ஆகும்.

அந்த நிலப் பகுதிகள் அனைத்தும் ஸ்பார்க்வேவ் ரியல்டி இந்தியாபிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் வாங்கப்பட்டிருந்தது கண்ட றியப்பட்டது. இந்த நிறுவனம். கானின் மனைவி ஹினா கான் மற்றும் இந்தூ ரைச் சேர்ந்த யுவராஜ் பன்வார் ஆகியோரால் கூட்டாக நடத்தப்பட்டு வந்ததும் தெரியவந்தது. இந்த நிறுவனம் குறித்த தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விசாரணையில் இது வரை, குற்றம்சாட்டப்பட்ட பெரோஸ் கான் என்பவரின் பெயரில் 46 அசையா சொத்துக்கள் வாங்கப்பட்டது தெரியவந்துள்ளது. தன்னையும், தனது கூட்டாளிகளையும், நிறுவ னத்தையும், தனது குடும்ப உறுப்பினர்களையும் சேர்த்து. குற்றம்சாட்டப்பட்டவர் அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துக்களுக்காக மொத்தம் 18,79,79,531 ருப்பதுகண்டறியப்பட்டுள்ளது. வாங்கப்பட்டஅசையா சொத்துக்களின் வழிகாட்டி மதிப்பு 17,19,46,323 ஆகவும், அவற்றின் தற்போதைய சந்தை மதிப்பு 64,01,11,768 என குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT