தேசிய செய்திகள்

ராகுல்காந்தியை பற்றி பிரியங்கா பெருமிதம்

ராகுல்காந்தியை சகோதரராக பெற்றதற்கு பெருமைப்படுகிறேன் என பிரியங்கா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா நேற்று வெளியிட்ட ரக்ஷா பந்தன் வாழ்த்து செய்தியில்,

அனைவருக்கும் ரக்ஷா பந்தன் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். ராகுல்காந்தியை சகோதரராக பெற்றதற்கு நான் பெருமைப்படுகிறேன். அவரைப்போன்றவர் சகோதரராக கிடைத்தது, நான் பெற்ற அதிர்ஷ்டம்.

எல்லா நல்லது, கெட்டதுகளிலும் ராகுல்காந்தியுடன் நான் இருந்துள்ளேன். உண்மை, பொறுமையுடன் வாழ்க்கையை வாழும் கலையை அவரிடம் இருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் தன்னை பின்தொடரும் 1.54 கோடி பேருக்கு நேற்று ரக் ஷா பந்தன் வாழ்த்து தெரிவித்தார். இதில் அவரும் தனது தங்கை பிரியங்கா காந்தியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.