திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விடுமுறை மற்றும் விசேஷ தினங்களில் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இலவச தரிசனத்தில் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.
இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 74 ஆயிரத்து 128 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 36 ஆயிரத்து 53 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 58 லட்சம் ஆகும். மேலும், லட்டு விற்பனை 3.98 லட்சமாகவும், அன்னபிரசாதம் பெற்ற பக்தர்கள் எண்ணிக்கை 2.75 லட்சமாகவும் பதிவாகியுள்ளது.