தேசிய செய்திகள்

ஒருதலை காதல் விவகாரம்: தாய்-மகள் கத்தியால் குத்திக்கொலை - வாலிபர் வெறிச்செயல்

சிவம் உபாத்யாயா நான்சி மிஸ்ரா என்ற பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்தார்.

மும்பை,

மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம், நாலச்சோப்ரா பகுதியை சேர்ந்தவர் சிவம் உபாத்யாயா (வயது27). இவர் விரார் போலிஞ்ச் பகுதியில் வசித்து வந்த நான்சி மிஸ்ரா(25) என்ற பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்தார். அவரை திருமணம் செய்து கொள்ளவும் விரும்பினார். இதுபற்றி அறிந்த நான்சியின் தாய் சயீதா மிஸ்ரா(50). வாலிபரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம டைந்த வாலிபர் அவர்களது வீட் டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டார்.

அப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த சிவம் வீட்டை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு. தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சயீதா மற்றும் நான்சி ஆகிய இருவரையும் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த தாய்-மகள் இருவரும் சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர் மனமுடைந்த சிவம் அதே கத்தியால் தனது உடலிலும் பலமாக குத்தி தற்கொலைக்கு முயன்றார்.

வீட்டில் கண்ணாடி உடையும் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், 3 பேரும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி உடனடியாக அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அவர்கள் உயிரிழந்த தாய், மகளின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிருக்கு போராடிக்கொண்டி ருந்த சிவம் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.