தேசிய செய்திகள்

கோடை வெப்பத்தைத் தணிக்க வெங்காயம் போதும்; மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, கோடை வெப்பத்தைத் தணிக்க வித்தியாசமான ஆலோசனையை வழங்கியுள்ளார்.

நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. வெயிலின் அளவு மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் கடும் இன்னலை எதிர்கொண்டு வருகிறார்கள். காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அவசியம் இன்றி வெளியே வர வேண்டாம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள். வெயிலின் தாக்கத்தால் ஹீட் ஸ்டிரோக் ஏற்படும் அபாயம் இருப்பதால் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

வெயிலின் தேவையின்றி அலைய வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, கோடை வெப்பத்தைத் தணிக்க வித்தியாசமான ஆலோசனையை வழங்கினார். வெப்ப அலையிலிருந்து தப்பிக்க உங்கள் பாக்கெட்டில் ஒரு வெங்காயத்தை வைத்துக்கொள்ளுங்கள்.

இது ஒரு பழங்கால ரகசியம், இதைச் செய்தால் உங்களுக்கு எதுவும் ஆகாது. வெப்பநிலை அதிகமான டிகிரியைத் தாண்டினாலும், நான் எனது காரில் பயணிக்கும்போது ஏசியைப் பயன்படுத்துவதில்லை. இயற்கை முறைப்படி வெப்பத்தை எதிர்கொள்வதையே நான் விரும்புகிறேன்” என்றார். ஜோதிராதித்ய சிந்தியாவின் இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் விவாதப்பொருளாகியுள்ளது.