ஐபோன் 
தேசிய செய்திகள்

இந்தியாவில் ஒருவருக்கு 2 ஐபோன்கள் மட்டுமே: ஆப்பிள் நிறுவனம்

ஐபோன் டியோ, ஐபோன் 17, ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் ஆகிய புதிய மாடல்களுக்கு இந்த புதிய கட்டுப்பாடு முற்றிலும் பொருந்தும் என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் ஒரு வாடிக்கையாளர் அதிகபட்சம் இரண்டு ஐபோன்களை மட்டுமே வாங்க முடியும் என்று ஆப்பிள் நிறுவனம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

நடவடிக்கை

பண்டிகை காலங்களில் ஐபோன்களுக்கான தேவை இந்திய சந்தையில் மிக அதிகமாக உள்ளது. இதன் காரணமாக, ஆன்லைன் மற்றும் நேரடி விற்பனையில் கருப்பு சந்தைப்படுத்துதலை தடுக்கவும், அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் போன்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவும் ஆப்பிள் நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிகிறது.

முக்கிய ஐபோன்களுக்கு புதிய கட்டுப்பாடு

இது தொடர்பாக ஆப்பிள் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஒரு நபர் அதிகபட்சமாக 2 ஐபோன்களை மட்டுமே ஆர்டர் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐபோன் டியோ, ஐபோன் 17, ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் ஆகிய புதிய மாடல்களுக்கு இந்த புதிய கட்டுப்பாடு முற்றிலும் பொருந்தும் என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் இந்த திடீர் நடவடிக்கை, மொபைல் பிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT