தேசிய செய்திகள்

எதிர்க்கட்சிகளின் நோக்கம் வீக் புதுச்சேரி: எமது நோக்கம் பெஸ்ட் புதுச்சேரி - பிரதமர் மோடி

சாலை பேரணியில் பெண்களும், இளைஞர்களும் அதிக எண்ணிக்கையில் பங்கேற்றதாக பிரதமர் கூறினார்.

பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

புது டெல்லி,

புதுச்சேரியில் இன்று நடைபெற்ற சாலை பேரணி மிகச்சிறப்பாக அமைந்தது. புதுச்சேரி மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணி அரசை மீண்டும் தேர்ந்தெடுக்க முடிவு செய்துவிட்டனர், இதன்மூலம் பெஸ்ட் புதுச்சேரியை உருவாக்கும் எங்கள் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம். சாலை பேரணியில் பெண்களும், இளைஞர்களும் அதிக எண்ணிக்கையில் பங்கேற்றதாக பிரதமர் கூறினார்.

கடந்த முறை நான் புதுச்சேரிக்கு வந்திருந்தபோது பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஊரக பகுதிகளில் 41 சாலைகளின் கட்டுமானம், புதுச்சேரியில் ஒரு பாரம்பரிய நகரத்தின் உருவாக்கம், சதுப்பு நில காடுகளை மீட்டெடுத்தல் மற்றும் குடிநீர் விநியோக மேம்பாடு உள்ளிட்டவை இதில் அடங்கும். இந்த பணிகள் அனைத்தும் உரிய காலத்தில் நிறைவடைவதை இந்த இரட்டை எஞ்சின் அரசு உறுதி செய்யும் என தெரிவித்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணி பெஸ்ட் புதுச்சேரியை உருவாக்க பாடுபடும் வேளையில், எதிர்க்கட்சிக்கு புதுச்சேரியின் முன்னேற்றம் குறித்து எந்தத் தொலைநோக்கு பார்வையும் இல்லை. அவர்கள் மக்களின் விருப்பத்திற்கு செவிசாய்ப்பதற்கு பதிலாக, புதுச்சேரியை ஒரு ஏடிஎம் போல பயன்படுத்தி, தில்லியில் உள்ள உயர் தலைமை ஆட்சியின் கீழ் அது இருப்பதை உறுதி செய்ய விரும்புகிறார்கள்.

சில நாட்களுக்கு முன், நான் புதுச்சேரி பிஜேபி வாக்குச்சாவடி முகவர்களுடன் உரையாடி கொண்டிருந்தேன். அப்போது எமது கட்சியின் செயல்வீரர் ஒருவர், எதிர்க்கட்சியின் நோக்கம் ஒரு WEAK புதுச்சேரியை உருவாக்குவதே என்று மிக சரியாகவே கூறினார் என்று மோடி தெரிவித்தார்.

அவர் WEAK என்று கூறியதன் பொருள் இதுதான்:

W- மோசமாக நிர்வாகம் செய்தல்

E- வளர்ச்சிக்கு முடிவு கட்டுதல்

A - மக்களுக்கு எதிராக இருத்தல்

K- பொருளாதாரத்தை அழித்தல்

இவ்வாறு அதில் தெரிவித்தார்.