புதுடெல்லி,
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 20 ஆம் தேதி கூடியது. அவை கூடியதில் இருந்தே நீட் வினாத்தாள் கசிவு மற்றும் ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தில் தடியடி நடத்தப்பட்டது குறித்து விவாதிக்கக் கோரி மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில் இன்று காலை மக்களவை கூடியதும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை அமளிக்கு இடையே நடைபெற்று வருகிறது.