தேசிய செய்திகள்

காவிரியில் நீர் திறக்க எதிர்ப்பு: மீண்டும் எல்லை அடைப்பு போராட்டத்தை அறிவித்த வாட்டாள் நாகராஜ்

காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கும் கர்நாடகாவுக்கும் இடையே பிரச்சினை நிலவி வருகிறது.

காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் மீண்டும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணையில் நேற்று முற்றுகைப் போராட்டம் நடத்திய கன்னட சலுவாலி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் உள்ளிட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, வருகிற செப்டம்பர் 1-ந் தேதி கர்நாடகா-தமிழக எல்லையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார் . செப்டம்பர் 1-ந் தேதி அத்திப்பள்ளி பகுதியில் எல்லை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்றும், அப்போது கர்நாடகா-தமிழகம் இடையே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது என்றும் வாட்டாள் நாகராஜ் எச்சரித்துள்ளார் .

வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி

காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கும் கர்நாடகாவுக்கும் இடையே பிரச்சினை நிலவி வருகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்துக்கு வழங்கும் தண்ணீரின் அளவை பாதியாக குறைக்க அனுமதிக்க வேண்டும் என கர்நாடகம் வலியுறுத்தியது. ஆனால் இதனை ஓரளவு கேட்டுக்கொண்ட ஒழுங்காற்றுக்குழு அதிகாரிகள் வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்கு (இன்று காலை 8 மணி முதல் 11.66 டி.எம்.சி. தண்ணீர் வழங்குமாறு பரிந்துரைத்தனர்.

காவிரி ஒழுங்காற்று குழு

தண்ணீர் திறப்பு குறித்த உத்தரவை அதிகாரப்பூர்வமாக வழங்கும் அடிப் படையில் காவிரி மேலாண்மை ஆணையம் நேற்று கூடியது. இது ஆணையமும் காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரையை செயல்படுத்த கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி கர்நாடகா காவிரியில் நீர் திறக்க அம்மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணையில் நீர் குறைவிக்று தண்ணீர் திறந்து விட்டதே காரணம் என்ரு