தேசிய செய்திகள்

பஹல்காம் தாக்குதல் பாகிஸ்தானில் இருந்தே திட்டமிடப்பட்டது: என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகையில் தகவல்

பயங்கரவாதிகளின் செல்போன் பாகிஸ்தானின் லாகூர், கராச்சியில் வாங்கப்பட்டவை என்று என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

2025-ம் ஆண்டு பஹல்காமில் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 1,113 சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் வருமாறு: ``பஹல்காம் தாக்குதல் பாகிஸ்தானில் இருந்தே திட்டமிடப்பட்டது. லாகூரில் பதுங்கியிருந்து வாட்ஸ்அப் மூலம் தாக்குதலை வழிநடத்தி உள்ளனர். லஷ்கர் கமாண்டர் சாஜித் ஜட் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

3 பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு, உள்ளூர் காஷ்மீரிகள் 2 பேர் அடைக்கலம் தந்துள்ளனர். ஆபத்தை முன்பே அறிந்தும், உள்ளூர் குதிரை ஓட்டுநர்கள் உண்மையை மறைத்துள்ளனர். பயங்கரவாதிகளின் செல்போன் பாகிஸ்தானின் லாகூர், கராச்சியில் வாங்கப்பட்டவை”இது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளன.