தேசிய செய்திகள்

ரோஹிங்யா அகதிகளை பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் மத்திய மந்திரி கிரிராஜ் சிங்

ரோஹிங்யா அகதிகளை பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என மத்திய மந்திரி கிரிராஜ் சிங் பேசிஉள்ளார்.

புதுடெல்லி,

சர்ச்சைக்குரிய கருத்துக்களால் அறியப்பட்ட பாரதீய ஜனதா தலைவர், மத்திய மந்திரி கிரிராஜ் சிங், ரோஹிங்யாக்களுக்கு ஜமாத்-இ-முகமது தலைவர் மசூத் ஆசார் நிதி வழங்குவதால், அவர்களை அகதிகளாக பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என கூறிஉள்ளா.ர்

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் நிதி உதவி அளிப்பது மற்றும் எல்லையில் பயங்கரவாதிகளை ஊடுருவ செய்ய பாகிஸ்தான் ராணுவம் உதவிசெய்வது ஆகிய சம்பவங்களை குறிப்பிட்டு பேசிய கிரிராஜ் சிங், கூடுதல் ஊடுருவல்காரர்களை ஏற்றுக் கொள்ள இந்தியாவிற்கு இடம் பற்றாது, எனவே ரோஹிங்யா இஸ்லாமியர்கள் வெளியேற வேண்டும் என்றார். ரோஹிங்யா இஸ்லாமியர்கள் சட்டவிரோதமாக தங்கிஉள்ளனர் எனவும் இந்திய பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் எனவும் மத்திய அரசு கூறிஉள்ளது.

மத்திய அரசின் நிலைப்பாட்டிற்கு ஆதரவை தெரிவித்து உள்ள கிரிராஜ் சிங் சட்டத்திற்கு மேல் மனிதநேயம் கிடையாது என கூறிஉள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசுகையில் மசூத் ஆசார் ரோஹிங்யாக்களுக்கு நிதி உதவி அளிப்பதால் பாகிஸ்தானே அவர்களை ஏற்றுக் கொள்வது மிகவும் சரியானது, என குறிப்பிட்டு உள்ளார்.

நரேந்திர மோடி ஆட்சிக்கு வருவதை தடுக்க முயற்சி செய்பவர்களுக்கு இந்தியாவில் இடம் கிடையாது, அவர்கள் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும் என பேசி சர்ச்சையில் சிக்கியவர் கிரிராஜ் சிங்.