தேசிய செய்திகள்

மும்பை தாக்குதல் குற்றவாளி குறித்து தகவல் அளித்தால் ரூ.70 லட்சம் பரிசு- 'பாகிஸ்தான் அரசு அறிவிப்பு

மும்பை தாக்குதல் குற்றவாளியும், ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் நிறுவனருமான மசூத் அசார் குறித்து தகவல் அளித்தால் ரூ.70 லட்சம் பரிசு வழங்கப்படும் என பாகிஸ்தான் அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பயங்கரவாதியாக அறிவிப்பு

பாகிஸ்தானை தளமாக கொண்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமதுவின் தலைவர் மசூத் அசார் (வயது 58). 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகி றார். 2001-ம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற தாக்குதல், 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதல், 2016-ம் ஆண்டு பதான்கோட் விமானப்படை தள தாக் குதல் மற்றும் 2019 புல்வாமா குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல்வேறு தாக்கு தல்களுக்கு இவர் மூளையாக செயல்பட்டுள்ளார். இவரை ஐ.நா., பாது காப்பு சபை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது.இந்த நிலையில் ஜெய்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரைப் பற்றிய தகவல் அளிப்போருக்கு 7 மில்லியன் ரூபாய் (இந்திய மதிப்பு ரூ.70 லட்சம்) பரிசுத்தொகை வழங்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. நாட்டின் மத்திய புலனாய்வு அமைப் பின் (எப்.ஐ.ஏ.) ‘ரெட் புக்' தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் அவர் தொடர்ந்து இடம்பெற்றுள்ளார்.

தற்காத்து கொள்ள நடவடிக்கை

நாடாளுமன்ற தாக்குதல் உள்ளிட்ட பல வழக்குகளில் இந்தியாவில் தேடப்படும் மசூத் அசாருக்கு பாகிஸ்தான் புகலிடம் அளிப்பதாக இந் தியா குற்றம் சாட்டி வருகிறது. குஜ்ரன்வாலா, முல்தான் மற்றும் லாகூர் ஆகிய இடங்களில் உள்ள பயங்கரவாத தடுப்புப்பிரிவு போலீஸ் நிலை யங்களில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச நாடுகளின் அழுத்தத்தில் இருந்து தப்பவும், மீண்டும் பொருளா தார ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எப்.ஏ.டி.எப்., எனப்படும் சர்வ தேச நிதியியல் நடவடிக்கை பணிக்குழுவின் 'சாம்பல் பட்டியலில்' தங்கள் நாட்டின் பெயர் இடம்பெறாமல் தற்காத்துக் கொள்வதற்கும் பாகிஸ்தான் இந்நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT