ராஜஸ்தான் காவல்துறையின் புலனாய்வு அமைப்புகள் ஐ.எஸ்.ஐ. ஆதரவாளர்கள் வழிபாட்டு தளங்களில் நன்கெடை பெட்டிகளை அமைத்து உள்ளதை கண்டறிந்து உள்ளனர். இந்த பெட்டியில் போடப்படும் நன்கொடை பணங்கள் அந்த மாநிலத்தில் எல்லையோர கிராமங்களில் தீவிரவாத செயல்களுக்காக பயன்படுத்தப்படுகிறது என போலீசார் தெரிவித்து உள்ளனர்.
சில நாட்களுக்கு முன் ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தின் தெலை கிராமத்தில் ஐ.எஸ்.ஐ உளவாளியான தீனாகான் என்பவனை போலீசார் கைது செய்தனர்.அவனிடம் நடத்திய விசாரணையில் பார்மர் மாவட்டத்தில் உள்ள சேஹ்தன் கிராமத்தில் ஒரு சிறிய மசார் பெறுப்பாளராக பெறுப்பேற்றிருப்பதாக கான் தெரிவித்துள்ளான்.சத்ர மஹேஸ்வரி மற்றும் அவரது மருமகன் வினேத் மஹேஸ்வரி பேன்ற மற்ற உளவாளிகளுக்கு மசார் நன்கெடை ரூ 3.5 லட்சம் வழங்கி உள்ளதாக உளவுப்பிரிவு மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.
மேலும் அவர் கூறும் போது பாகிஸ்தானில் உள்ள தீனாவின் கையாளர்கள் அவரை தெலைபேசியில் அழைத்து, அதற்கேற்ப நிதிகளை விநியேகிக்கும்படி அவரிடம் கூறி உள்ளனர். மஸார் அதிகாரிகளால் நன்கொடை ஆவணங்கள் எதுவும் இல்லை என்பதால், தீனா கான் மத விரேத நடவடிக்கைகளுக்கு ஒரு பகுதியை இரகசியமாகப் பயன்படுத்தி உள்ளார். என கூறினார்.
எல்லைப் பகுதிகளில் உள்ள பல இடங்களில் ஐ.எஸ்.ஐ. இது பேன்ற பல நன்கெடை பெட்டிகளை தங்கள் உளவு பணிகளுக்காக அமைத்துள்ளதாக பேலீசார் சந்தேகிக்கின்றனர்.