தேசிய செய்திகள்

பாலக்காடு; தோட்டத்தில் இறந்து கிடந்த காட்டுயானை

காட்டுப்பன்றிகளை பிடிக்க தோட்டத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கியதில் மின்சாரம் தாக்கி யானை இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பாலக்காடு,

பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி பகுதி கோட்டப்பறையில் கல்கண்டி கிராமத்தில் தோட்டம் ஒன்று உள்ளது. இந்த தோட்டத்தில் காட்டுயானை ஒன்று இறந்த நிலையில் காணப்பட்டது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் உடனே வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர்.

இதில் இறந்தது சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை என்பது தெரியவந்தது. காட்டுப்பன்றிகளை பிடிக்க தோட்டத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கியதில் மின்சாரம் தாக்கி யானை இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து வனத்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT