தேசிய செய்திகள்

மெட்ரோ ரெயில் இருக்கையில் படுத்து கிடந்த பயணி: வீடியோ வைரலாகி பரபரப்பு

மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்வோருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

பெங்களூரு,

பெங்களூருவில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஒயிட்பீல்டு- செல்லக்கட்டா, ஆர்.வி.ரோடு- பொம்மசந்திரா, மாதவரா-சில்க் இன்ஸ்டிடியூட் ஆகிய 3 வழித்தடங்களில் சுமார் 96 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் தினமும் 10 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள்.

இந்த நிலையில் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்வோர் புகையிலை பொருட்கள் பயன்படுத்தக் கூடாது, இருக்கையில் அமர்ந்து செல்போனில் அதிக சத்தத்துடன் ரீல்ஸ் பார்க்கக் கூடாது, உணவு சாப்பிடக் கூடாது, மெட்ரோ ரெயில் இருக்கையில் அமர்ந்து தான் பயணிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

இருப்பினும் மெட்ரோ ரெயிலில் வாலிபர் ஒருவர் இருக்கையில் அமர்ந்து செல்லாமல், படுத்துகிடந்தப் படி பயணம் செய்துள்ளார். இதனை யாரோ ஒருவர் செல்போனில் வீடியோவாக படம் பிடித்துள்ளார். அதனை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் மெட்ரோ ரெயில் இருக்கையில் படுத்த பயணியை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க மெட்ரோ ரெயில் கழகத்தை வலியுறுத்தி உள்ளனர்.

SCROLL FOR NEXT