தேசிய செய்திகள்

இயக்குனர் பாரதிராஜா மறைவு: சந்திரபாபு நாயுடு இரங்கல்

புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் பாரதிராஜா மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

அமராவதி,

இயக்குநர் பாரதிராஜா (84 வயது) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் அவரது மகன் மனோஜ் மறைந்த நிலையில், அத்துயரிலிருந்து மீளாத பாரதிராஜா, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

காலமானார்

வீட்டில் இருந்தபடியே மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இயக்குநர் பாரதிராஜா இன்று அதிகாலையில் காலமானார்.

ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

இயக்குநர் பாரதிராஜா

புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட துறைகளுக்கு அவர் பல மறக்க முடியாத படைப்புகளை வழங்கியுள்ளார். இந்திய திரையுலகிற்கு அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

ஆழ்ந்த இரங்கல்

அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தித்து கொள்கிறேன். மேலும், அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், மனமார்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறேன்."

என்று தமது இரங்கல் செய்தியில் சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டுள்ளார்.