சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் தனது எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
வேலையில்லா இளைஞர்களுக்கு பாஜகவின் பதில் - தடியடி. இன்று இந்தியாவில் மிகப்பெரிய பிரச்சினை வேலையின்மை. அதன் மிக கொடிய தாக்கத்தை பீகார் மற்றும் உத்தர பிரதேச இளைஞர்கள் அனுபவித்து வருகின்றனர்.
லட்சக்கணக்கான இளைஞர்கள் பட்டங்களையும் திறமைகளையும் கையில் ஏந்திக்கொண்டு வேலை தேடி அலைந்து திரிகிறார்கள். ஆனால் பாஜக அரசுக்கு இவர்களை பற்றிய கவலையும் இல்லை, அவர்கள் எதிர்காலத்தை பற்றிய அக்கறையும் இல்லை.
இளைஞர்கள் தங்களின் உரிமையை கேட்டு சாலைகளில் இறங்கும் போது, அவர்களின் கைகளில் வேலைவாய்ப்பு கொடுக்கப்படவில்லை, அதற்கு பதிலாக முதுகில் தடியடி தான் கொடுக்கப்படுகிறது. பாஜகவின் பொய்களால் இந்திய இளைஞர்கள் வெறுத்து போயுள்ளனர்.
அவர்கள் இனி அமைதியாக இருக்க மாட்டார்கள். மேலும், ஒவ்வொரு தருணத்திலும் காங்கிரஸ் அவர்களுடன் உறுதியாக நிற்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.