தேசிய செய்திகள்

ஆந்திராவில் நடிகர் பவன் கல்யாண் பிரம்மாண்ட பேரணி..!

ஜன சேனா கட்சியின் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் பிரம்மாண்ட பேரணியில் கலந்து கொண்டார்.

விசாகப்பட்டினம்,

விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலையை தனியார்மயம் ஆக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. விசாகப்பட்டினம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலை வரை பேரணி நடைபெற்றது. மத்திய அரசின் தனியார்மயமாக்கலை எதிர்க்கும் வகையிலும் இந்த பேரணி அமைந்தது.

ஜன சேனா கட்சியின் தலைவரும் ஆந்திராவின் முன்னணி நடிகருமான பவன் கல்யாண் இந்த பேரணியில் கலந்து கொண்டார். முன்னதாக விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலை பணியாளர்கள் மற்றும் விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலை பாதுகாப்பு அமைப்பினர் இந்த பிரம்மாண்ட பேரணியை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதையும் படியுங்கள்: இந்திய - நியூசிலாந்து போட்டி: ராசியில்லாத நடுவர் - ரசிகர்கள் அதிர்ச்சி...!