புதுடெல்லி,
மேற்காசிய நாடுகளில் நிலவிய போர் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. இதன் எதிரொலியாக பல்வேறு நாடுகளில் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் உட்பட எரிபொருள் விலை கடுமையாக அதிகரித்தது.
இந்த நிலையில், அமெரிக்கா, ஈரான் இடையே இறுதியாகியுள்ள அமைதி ஒப்பந்தத்தால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென சரிந்துள்ளது. அன்படி, கச்சா எண்ணெய் விலை தரத்தை பொறுத்து பீப்பாய் ஒன்றுக்கு 2.8 சதவீதம் முதல் 6 சதவீதம் வரை குறைந்துள்ளது. ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை 4.03 சதவீதம் சரிந்து ஒரு பேரல் 83.81 டாலராகவும், அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் விலை 4.70 சதவீதம் சரிந்து 80.89 டாலராகவும் வர்த்தகமாகிறது.
மேலும் ஜப்பான், கொரிய பங்குச்சந்தைகள் 5 சதவீதம் அளவிற்கு உயர்வுடன் வர்த்தகமாகிறது. ஆசிய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கியதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.