புது டெல்லி,
பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-
பணிவு, மன்னிப்பு, மற்றும் உன்னத நடத்தை ஆகியவையே ஆளுமையின் உண்மையான அணிகலன்கள். இந்த குணங்களுடன், நாட்டு மக்கள் இன்று வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் உறுதியாக ஈடுபட்டுள்ளனர்.
மாற்றொரு எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-
நமது மல்யுத்த வீரர்களின் மிகச்சிறந்த செயல்பாடு!
வியட்நாமின் டா நாங்கில் நடைபெற்ற 23 வயதுக்குட்பட்டோர் (U23) ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் நமது ஆண்கள் ப்ரீஸ்டைல் மற்றும் பெண்கள் மல்யுத்த அணிகள் குழு பட்டங்களை வென்றன.
ஆண்கள் ப்ரீஸ்டைல் மல்யுத்த அணி 4 தங்கம் உட்பட 9 பதக்கங்களை வென்று, 23 வயதுக்குட்பட்டோர் (U23) ஆசிய சாம்பியன்ஷிப் வரலாற்றில் இந்தியா இதுவரை இல்லாத அதிகபட்ச ஒட்டுமொத்த பதக்க எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. பெண்கள் மல்யுத்த அணி 6 தங்கம் உட்பட 10 பதக்கங்களை வென்றது. கிரேக்கோ-ரோமன் அணியும் 8 பதக்கங்களுடன் தனது வரலாற்றிலேயே அதிகபட்ச ஒட்டுமொத்த பதக்க எண்ணிக்கையைப பதிவு செய்துள்ளது.
நமது மல்யுத்த வீரர்களுக்கு வாழ்த்துகள். அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.