தேசிய செய்திகள்

பெட்ரோல், டீசல் பயன்பாட்டை மக்கள் குறைக்க வேண்டும்: பிரதமர் மோடி அறிவுறுத்தல்

சேமிக்கும் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசலும் எரிபொருள் இறக்குமதிக்காக இந்தியா அந்நிய செலவாணி செலவிடுதை குறைக்கும்

பெட்ரோல், டீசல் விலை வரும் 15 ஆம் தேதிக்குள் ரூ.4 முதல் 5 வரை உயரக்கூடும் என்று சில தகவல் வெளியானது. இது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சூழலில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி பேசியதாவது:- பெட்ரோல் - டீசல் விலை உலகளவில் கடுமையாக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் வாங்குவதற்காக செலவிடப்படும் அந்நியச் செலாவணியையும் சேமிக்க, அவற்றை சிக்கனமாக பயன்படுத்துவது நம் அனைவரின் பொறுப்பாகும். ஓராண்டுக்கு திருமணத்திற்கு தங்கம் வாங்க வேண்டாம் என்று நான் மக்களுக்கு கோரிக்கை விடுக்கிறேன்.

கடினமான பொருளாதார சூழ்நிலையில் நாட்டின் வளங்களை சேமிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். கொரோனா காலத்தில் வீட்டிலிருந்தே வேலை செய்வது , ஆன்லைன் மீட்டிங் மற்றும் வீடியோ கான்பரன்ஸ் போன்ற முறைகளுக்கு மக்கள் எளிதாக பழகி விட்டனர். எரிபொருள் நுகர்வை மிச்சப்படுத்த இதேபோன்ற ஒரு நடைமுறையை மீண்டும் ஊக்கப்படுத்த வேண்டும். சேமிக்கும் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசலும் எரிபொருள் இறக்குமதிக்காக இந்தியா அந்நிய செலவாணி செலவிடுதை குறைக்கும்" என்றார்.