தேசிய செய்திகள்

குழந்தை பெற்றெடுத்த பிளஸ்-2 மாணவி.. போக்சோவில் மாணவர் கைது

மாணவிக்கு பிரசவ வலி ஏற்பட்டு இடுக்கி அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்தது.

இடுக்கி,

கேரள மாநிலம், இடுக்கியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவரும், உடன் படிக்கும் சக மாணவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் 2 பேரும் நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது. இதில் அந்த மாணவி கர்ப்பமானார். இதனை அந்த மாணவி, தனது பெற்றோருக்கு தெரியாமல் மறைத்து வந்தார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று அந்த மாணவிக்கு பிரசவ வலி ஏற்பட்டு, இடுக்கி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு குழந்தை பிறந்தது. இந்த தகவலை கேட்டு மாணவியின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அவர்கள், இடுக்கி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், மாணவியின் கர்ப்பத்திற்கு சக மாணவர் தான் காரணம் என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவரை கைது செய்தனர். பிளஸ்-2 மாணவி குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.