புதுடெல்லி
டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமையகத்தில், அக்கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் இன்றிரவு நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். இந்த கூட்டத்தில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின் மற்றும் பிற முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
நாட்டில் தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நடப்பு ஆண்டில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தலுக்கான தேதி, வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.
இதில், 234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கான தேர்தல் ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்கப்படும். இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும்.
இதுதவிர, 140 தொகுதிகள் கொண்ட கேரளா 126 தொகுதிகள் கொண்ட அசாம் ஆகிய மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் (30 தொகுதிகள்) ஏப்ரல் 9-ந்தேதி ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்தப்படும். இதற்கான வாக்கு எண்ணிக்கையும் மே 4-ந்தேதி நடைபெறும்.
294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காளத்தில் ஏப்ரல் 23-ந்தேதி முதல் கட்ட தேர்தலும், 29-ந்தேதி 2-ம் கட்ட தேர்தலும் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழலில், பா.ஜ.க. மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் அவர் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.